காவல்/ஷண்முக சுப்பையா

வீட்டைச் சுற்றி
தோட்டம் போட்டேன்
தோட்டத்தைச் சுற்றி
வேலி போட்டேன்
வேலியைச் சுற்றி
காவல் போட்டேன்
கவலைப் பற்றிக்
கவலைப் பட்டேன்.