என்பா/சசிகலா விஸ்வநாதன்

(அழகிய சிங்கர் என்பா)

1.

வாளால் அறுத்தும்
கோலால் சுட்டும்
வார்த்தையால் கடிந்தும்;
மனதால் நயந்தும்;
வழிநடத்தும்; மாண்புடை ஆசான் அவரை;
அனுதினமும் அடி பணிவேன்.

2.

வண்ண மயில் இறகை காண;
கண்ணில் மின்னும் வெள்ளந்தி சிரிப்பு!
உடல் உலர்ந்தால் என்ன; உள்ளத்தின்
உன்னத உண்மை சிரிப்பு!