
எழுத்தறிவித்தவன்
இறைவனாகும்..
எண்ணும் எழுத்தும்
கண்ணாகும்.!
பழுத்தமரத்தின்
கனிகளுமாகும்..
படிப்பறிவித்த..
ஆசானாகும்!
ஒடித்துக் குச்சியில்
அடித்தப் போதும்..
உண்மை அன்பின்
ஊற்றுமாகும்!
நடித்து வாழ்ந்து
பிழைப்பவர் நடுவே
நம்மை உயர்த்திட
வாழ்பவர் பாதம்!
பிடித்து வணங்கிட
நினைத்தால் போதும்
பிருமனின் எழுத்தும்
மாறியேப் போகும்!
எடுத்து நிமிர்த்திய
ஏணியுமாகும்..
என்றும் நினைப்போம்
இன்றொரு நாளோ?
கரும்பலகையில்
கண்கள் திறந்தார்..
அருந்தமிழுக்கு..
அரிச்சுவடியானார்
பெரும்பணக்காரர்
இல்லையெனினும்
பேரன்பின்பிற்கோ..
பேராசான் ஆனார்!
ஒழுக்கம் உழைப்பு
உன்னத அன்பே
இழுக்கு இன்றியே
எடுத்துக்காட்டாய்..
பிழைப்பு என்று
ஆயிரம் இருக்க…
பேசும் தெய்வமே
ஆசானாய் தோன்றும்!
