மழைக்கவிதை

ம.சக்திவேலாயுதம்

மழை பெய்யாத தருணத்தில்
மழைக்கவிதை
வர மறுக்கிறது…

வெயில் கொளுத்தும் நேரத்தில்
வெயில்க்கவிதை
வரவும் மறுக்கிறது…

வெளியே கொஞ்சம் மழை கொஞ்சம் வெயில்…
கொஞ்சும் மழை…
கொஞ்சும் இளவெயில்!

இரண்டையும்
எழுத முற்படுகிறது மனம்…
அதில் தோற்றும் போகிறது!
ஜெயிக்கிறது இயற்கை…

உள்ளே சலன மழை…
சபல வெயில்…
காற்றழுத்தமற்ற ஓர்
மன அழுத்தம்…

புழுக்கமற்ற வெளியே..
ஒழுக்கமற்ற உள்ளே…
பிறகெப்படி
மழைக் கவிதையும்…
வெயில்க்கவிதையும்!

One Comment on “மழைக்கவிதை”

Comments are closed.