
என்னிடம்
முன்று
பேனாக்கள்
இருந்தன!
ஒன்று
நிப்பு
முனை முறிந்த
ஒன்று!
இன்னொன்று
மசி இல்லாத
ஊற்றினாலும்
ஒழுகும்
கொள் கல
ஓட்டைப் பேனா!
மற்றொன்று
அறம் மாய்த்த
பொய்க் காய
(உடல்)
நடு வயிற்று
அடிமை
பசித் தீ பேனா!
மூன்றையும்
அந்த ஐந்து
குமமாளி கேலி
சித்திரக் குள்ளர்கள்
கவ்வி விழுங்கினர்!
10/09/2023
