பேனா.! எங்கே போனாய்?/வே.கல்யாணகுமார்

ஏடொன்று விரித்து
எழுதுகோல் எடுத்து
எழுதியிங்கு எத்தனை
நாளாச்சு?

அலைபேசி யெடுத்து
பொத்தானை அழுத்தி
எழுதுவதே பலருக்கும்
பழக்கமாச்சு!

பேசுவதைக் கூட..
எழுத்தாக மாற்றும்
தொழில் நுட்பம்
நுழையலாச்சு!

பேனாக்கள் தொட்டு
எழுதுகிற வழக்கம்
பெரும்பாலும் மறையலாச்சு.!

கடிதங்கள் போச்சு..
மணியாடர் போச்சு..
எழுதுவது சோம்பலால்
நின்றுபோச்சு.!

காகிதத்தை விட்டு..
கணினியைத் தொட்டு
எழுதுகோலை அழகு
பொருளா க்கியாச்சு!

இங்குப் பேனா போச்சு
இங்கு பழையதாச்சு.!
எழுதுவதில் கௌரவம்
காணலாச்சு.!

எழுதுகோலை இனிமேல்
அருங்காட்சி அரங்கத்தில்
வைக்குநிலை! தோன்றலாச்சு!

. பெங்களூரூ.

3 Comments on “பேனா.! எங்கே போனாய்?/வே.கல்யாணகுமார்”

Comments are closed.