எழுதுகோல் போற்றுதல்/புவனா சந்திரசேகரன்

படைப்பாளியின் எழுதுகோல்
அன்புடன் பாராட்டுகிறது!
ஆயுதமாய்க் குத்திக் கிழிக்கிறது!
இன்முகத்துடன் வரவேற்கிறது!
ஈன்ற தாயாகப் பாசமளிக்கிறது!
உயர்ந்த கருத்து உரைக்கிறது!
ஊக்கமளித்து உயர்த்துகிறது!
எழுச்சிக்கு வழி காட்டுகிறது!
ஏற்றம் பெற வழி சொல்கிறது!
ஐயங்கள் தீர்க்கிறது!
ஒற்றுமையை வளர்க்கிறது!
ஓங்கித் தலையில் குட்டுகிறது!
ஔடதமாய்ச் சொற்களை உதிர்க்கின்றது!
அகிலத்தில் அஃதே வேண்டும்!
எழுதுகோலைப் போற்றுவோம்!

2 Comments on “எழுதுகோல் போற்றுதல்/புவனா சந்திரசேகரன்”

  1. பன்முகம் கொண்டது .
    தட்டிக் கேட்பதிலும்
    குத்திக் கிழிப்பதிலும்
    அது ஒரு ஆயுதம்
    எழுத்தாளனுக்கு பேனாவே துணை

Comments are closed.