ஆர். வத்ஸலா /கவிதை குறித்த கேள்விகள்-பதில்கள்

  1. கவிதை எழுத உகந்த நேரம் என்ன

மனதில் கவிதை தோன்றும் நேரம்

2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?

  1. கவிதை எழுத. தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா. ?

செயற்கை எனும் சொல்லுக்கும் கவிதைக்கும் தொடர்பே இருக்க முடியாது. அது தானாக தான் வரும். தலைப்பு/ படம் கொடுப்பது ‌அது சம்பந்தமாக யோசிக்க வைக்கிறது. அது கவிதையாக உருவானால் எழுதுவேன். இல்லாவிட்டால் விட்டு விடுவேன். பெரும்பாலும் படத்திற்கு கவிதை எழுத பிடிப்பதில்லை.

  1. உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்?

எழுதும்போதே அதை செதுக்குவேன், எனக்கு ‘சரி’ யெனத் தோன்றும் வரை. அதன் பிறகு முன்தீர்மானமற்ற நட்புகளிடம் கருத்து கேட்பேன். பெரும்பாலும் அவற்றை ஏற்பேன்.

  1. உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தை காட்ட விரும்புகிறீர்களா.?

நிச்சயமாக.‌ ஆனால்‌ என்னுடைய எல்லா கவிதைகளின் பாடுபொருளும் அதுவல்ல.