
மறைந்திடா என் பரிதியின் தோழனே
ஒவ்வொரு கவிஞரின்
உயிருக்குள் கவித் தீமூட்டி எழுபவனே
எட்டையபுரத்து காற்றை எட்டுத்திக்கும்
எழுத்துகளால் கடத்துபவனே
வறுமைக்கும் நேர்மைக்கும் வழக்காடியாப்
பெரும் கலைஞனே
சமத்துவத்தைக் கரம்போட்டு அழைத்து
வந்தவனே
வயிற்றுத் தீ வளர்ந்தபோதும்
கொள்கைத்தீயை
அணைத்திடாத சுடரோனே
பிறையென தேய்ந்த அங்கத்தை நெருப்பு
கோட்டால் கவசமிட்டு ஒளியென விரிந்தவனே
சக்தியின் மூலப்பொருளே அவளிடத்தில்
தமிழ்பால் அருந்திவளர்ந்தவனே
உன்அறப்பார்வை கண்ணனும் சேவகன்
ஆனானேன்
சொக்கட்டான் உருட்டாமல்
முன்னறிவு பெற்றவனே
அன்னியகவிஞர்களை தமிழுக்கு
அறிமுகம் செய்தவனே
புதுப்புது வடிவத்தை
கவிஞர்களுக்கு வித்திட்ட மூத்தோனே
பாரதியே உன்னை
பாட்டால் பாராதோர்
ஏது புவிதனிலே?
நித்தம் பிறக்கும் ஜனத்தில்
பிறந்துகொண்டேயிருக்கும்
என்உயிரே
அழிவற்ற உனக்கு ஏது அழிவு
அழியாத பரிதியே நீர் தானே.

Arumai!🙏👏