
வகைமை : அழகியசிங்கரின் என்பா
(1)
நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?
“நான் என்றும் சும்மா இருப்பதில்லை!
இயங்கிக் கொண்டேதான் இருக்கிறேன்”;
என்றான் என் ஆசான்!
(2).
நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?
சிறு பணி தேடிக் கொள்ளலாம்.
சுற்றுலா போகலாம்
கற்கலாம் புதிதாக
ஏதோ ஒன்று தினமும்.
(3)
நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?
கண்மாய் கரை
உயர்த்தி கட்டலாம்.
காடு திருத்தி
களனி ஆக்கலாம்.
செய்வற்கிருக்கு; வேலை நூறு
13-9-2023
