13.09.2023 – புதன் கிழமை

ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: இப்போது என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
அழகியசிங்கர் : எதுவும் படிக்கவில்லை.
ஜெகன் : ஏன்?
மோகினி : நேரம் இல்லையா மனம் இல்லையா
அழகியசிங்கர் : இரண்டும் இல்லை. விருட்சம் 123வது இதழை அனுப்பிக்கொண்டிருக்கிறேன். நூல் நிலையங்களுக்கு அனுப்பி விட்டேன். இன்னும் சந்தாதாரர்களுக்கு அனுப்ப வேண்டும்.
மோகினி : நீங்க ஒருவரே எல்லாவற்றிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
அழகியசிங்கர் : உண்மைதான்.
ஜெகன் : ரொம்ப தாமதமாக எல்லா முயற்சியையும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
அழகியசிங்கர்: வாஸ்தவம்.
ஜெகன் விருட்சம் 123வது இதழ் உங்களுக்குத் திருப்தியான இதழா?
அழகியசிங்கர் : என்னைப் பொறுத்தவரைத் திருப்திகரமான இதழ்.
மோகினி : இந்த இதழ் எத்தனைப் பக்ககங்கள்?
ஜெகன் : 64 பக்கங்கள்.
மோகினி : ஏன்?
அழகியசிங்கர் : ஒரு சிறுபத்திரிகை பக்கங்கள் அதிகமாக அதிகமாகச் செலவும் கூடிக்கொண்டே போகும். பத்திரிகையில் பெரிதாகச் சொல்லவும் இருக்காது. ஆத்மாநாம் நடத்திய ' ழ' பத்திரிகை 16 பக்கங்கள்தான்..
ஜெகன் : உண்மைதான். யுவன் சந்திரசேகருக்கு விஷ்ணுபுர விருது கிடைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அழகியசிங்கர் : திறமையான எழுத்தாளர். கடுமையாக உழைப்பார்.
மோகினி : நாளை வியாழக்கிழமை தாவோ தெ ஜிங் என்ற மொழிபெயர்ப்புப் புத்தகத்தைப் பற்றி எம்.டி முத்துக் குமாரசாமி பேசுகிறாரா?
அழகியசிங்கர் : ஆமாம். அவர் மொழிபெயர்ப்பு முதலில நெருடல் இல்லாமல் வாசிக்க முடிகிறது. அவருடைய நான்கு புத்தகங்களும் கவித்துவமாக இருக்கின்றன. கடுமையான முயற்சியாக இருக்க வேண்டும். வாழ்த்துகள் அவருக்கு.
மோகினி : இன்றைய இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர். இரவு வணக்கம்.
இரவு 10.49 மணி

நொடிகள் துடியாய்க் கடந்தன!
படிக்கப் பிடித்தும் இருந்தன!👏👌