மூன்று கவிதைகள்/எல்.ரகோத்தமன்

 
1) பயணம்
 
நதி நீரில்
மிதந்து வந்த
தக்கையின் மேல்
ஒரு கட்டெறும்பு !

                  
2) துளிகள்

 
கரு மேகம்
வரைந்து செல்லும்
வெற்றுருக்களின்
அர்த்தங்கள்
புரியாமல் நீளும்
ரகசியத்தில்
அதன் தேடல் வலையில்
சிக்கியும் சிக்காமலும்
துளித் துளியாய்
கரைந்து கொண்டிருக்கிறது
வாழ்வின் துளிகள்!

3) ரகசியம்
 
மேகத்தில்
ஒளிந்திருக்கும்
ரகசியம் யாதென
மழையிடம் கேட்டேன்!
நான் தான் என்றது
மழை!
மழையின் துளிகளில்
ஒளிந்திருக்கும்
ரகசியம் யாதென
மேகத்திடம் கேட்டேன்!
நான் தான் என்றது
மேகம்!