மனதுக்குப் பிடித்த கவிதை – 162/அழகியசிங்கர்

வீடு

விவேகானந்த் செல்வராஜ்

இப்போது அதிகத் தொலைவில்லை வீடு.
என் கால்கள் நடக்கும் சாலை ஒரு வலது திருப்பத்தில் அதன் கதவுகளில்.
ஒரு சின்னப் படகை கடலில் கொண்டு சேர்க்கும்
நதியின் காருண்யத்துடன் என்னை விட்டுச் செல்லும்.

நேற்று என் வீடு கற்பனைகளின் பாலங்களில் பயணிக்கும்.
நினைவுகளின் விரல்களின் தொலைவில் மிகவும் நெருக்கமாய்
ஆனால் வீட்டுக்கு பாதை சங்கடமானது.

ரயிலும் பேருந்தும் ஆட்டோ ரிக் ஷாவும் தூரங்களைக் கடக்கின்றன.
பயணம் கொடுமையானதாகவே இருக்கிறது.
இன்னும் இரண்டு அடிகளில்
இப்போது என் கண் முன்னே
முன்னெப்போதையும் விட மிகத் தொலைவில்
வீட்டை அடையும் வரை வீடு ஒரு கனவாக இருக்கிறது.

நன்றி : சுதந்திரம் ஒரு டப்பா – விவேகானந்த் செல்வராஜ் – வெளியீடு : மணல்வீடு, ஏர்வாடி குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் 636453 – விலை ₹ 80 – பக்கம் : 80. Phone : 9894605371