நடேசனைக் கேளுங்கள்/சீவ.தீனநாதன்

1946ம் வருடம். பகவான் ரமணரின் உருவத்தைச் சிலையில் வடிக்க ஆஸ்ரமத்தில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

சென்னையிலிருந்து கைதேர்ந்த சிற்பி ஒருவர் வந்தார் . அவர் முதலில் பகவானது மாதிரி உருவைக் களிமண்ணால் செய்து விட்டுச் சென்று விட்டார்.

ஆஸ்ரம சர்வாதிகாரி நிரஞ்சனானந்த சுவாமிகள் பகவானது பக்தர்களையெல்லாம் அழைத்து வந்து மாதிரி சிலையை காட்டி சரியாக இருக்கிறதா என்று அபிப்பிராயம் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஹாலில் பல பேர் கூடி யிருந்தனர்; ஒரு முக்கிய அடியார் பகவானையே கேட்டார், ‘சுவாமி! சிலையைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?’.

பகவான் கூறினார், என்னை ஏன் கேட்கிறீர்கள்? என் முகத்தை நான் எப்படி அறிவேன்? வேண்டுமானால் நடேசனைக் கேளுங்கள், சரியாகச் சொல்வான்,” என்றார்.

நடேசன் என்ற இளைஞர் சிறுவயதிலேயே பல புண்ணிய ஸ்தலங்களுக்கு வீட்டில் சொல்லிக்கொள்ளாமல். அடிக்கடி ஓடிப்போவார் திரும்பி வந்து பகவானிடம் தான் யாத்திரை. செய்ததைப் பற்றி கதை கதையாக சொல்வார் பகவான் ஒரு சிறு பையனை போல நடேசன் சொல்வதை எல்லாம் மிகவும் உற்சாகமாகக்
கேட்பார்.
இந்த நடேசனும் அன்று ஹாலில் சிலையை பார்த்துக் கொண்டு நின்றார்.

.பகவான் நடேசனைக் கேளுங்கள் என்றதும், அனைவரும் நடேசனை திரும்பிப் பார்த்தனர்.

மகான் மிகவும் நிதானமாக கூறினார்:
“நான் குறிப்பிட்டது. இந்த நடேசனை அல்ல எனக்கு சௌசம் செய்யும் நாவிதர் நடேசன் ” என்றார்.

அத்தனைப் பேரும் அயர்ந்து போனார்கள்.

ஆம். ஆம் மற்றவர்களை விடப் பகவானைத் தொட்டு முகத்திற்கு சௌசம் செய்த நாவிதர் நடேசனைத்தான் கேட்க வேண்டும்.

இதில் பகவானுக்கு சிறிதும் சம்மதம் இல்லை எனவேதான் இந்தப் பரிகாசமான ஆனால் உண்மையான கருத்தை பகவான் தெரிவித்தார்.