
எங்கள் வீட்டில்
ஏழு பேர் நாங்கள்
பள்ளி நாட்களில்
ஒருவர் பின் ஒருவர்
முன்னவர் முதுகைத் தொட்டுக்கோண்டு
தொடர் ரயில் வண்டி
ஓட்டிய அநுபவம்
முதல் ஆள் எஞ்சின்
கடைசி ஆள் கார்டு.
திருப்பதி செல்ல
நிஜ ரயில் ஏறி
சன்னலோர சீட்டுக்கு
சண்டையிட்ட அநுபவம்
அக்கா திருமணம்
ஊரு விட்டு ஊரு
ரயில் பயணம்
கும்மாளம் குதூகலம்
இன்றோ,
ஏழு பெட்டிகளும்
ஏழு திசையில்
நினைவுகள் மட்டும்
தொடர் ரயில் போல.

அருமை!!
Malarum ninaivugal!👏👌