சிந்தையில் சிறந்தவன்/சசிகலா விஸ்வநாதன்

வகைமை : அழகியசிங்கரின் என்பா

வேழ முகத்தான்,
தாழ வயிற்றான்,

அஞ்சு கரத்தான்,
விஞ்சு நடையான்,

ஐங்கரத்தான் அவன்,
ஓங்கார உருவுடைத்தான்;

சிந்தையில் புகுந்திட சிறப்பு!


17-9-2023