பிள்ளையார்/அழகியசிங்கர்

வணக்கம் வணக்கம். பிள்ளையார். என் வணக்கத்துக்குரிய
கடவுள்
எழுதத் துவங்கும் போது
உ போட்டு எழுதலாம்
எளிதாகப் பிள்ளையாரை வணங்கி விடலாம்.
மாடர்ன் ஆர்ட் படமாக வரையலாம்
கதையில் கொண்டு வரலாம்.
கவிதையாகச்
சொல்லலாம்.
எதற்கும்
எப்போதும்.
வளைந்து
கொடுப்பவர்.
அவரை இன்று கும்பிடுவோம்.
அவர் பிறந்தநாள்
இன்று