கணபதி!/பி. ஆர். கிரிஜா

தொந்தி கணபதியே
தினமும் எனைக்
காப்பவனே !
ஆனை முகனே
உன் அன்பில்
எனைக் கரைப்பவனே !
விக்ன விநாயகனே !
விரைந்தெனை
வழி நடத்துபவனே !
அனுதினம் உனைப்
பார்க்கையிலே
மனதினிலே
பரவசம் பொங்குதே !
உன் அளவிலா
அன்பை என்னவென்று நான் எடுத்துரைப்பேன் !
சதா சர்வ காலமும்
உனை துதிக்க
அருள் புரிவாய்
என் அன்பு
ஹேரம்பனே !


30/08/2022