பிள்ளையார் நினைவு/நாகேந்திர பாரதி

தெப்பக்குளத்தில் தொப்பென்று விழும்
எத்தனை பிள்ளையார்கள்

அவர் தொந்தியில் ஒட்டி இருக்கும்
ஒரு ரூபாய்க் காசுக்காக

சங்கடப்படாமல் சகதி நீருக்குள்
தேடி எடுத்துக் காண்பிக்கும்

நீச்சல் விளையாட்டில் மூழ்கி
மூச்சுத் திணறி மரணமான

நண்பன் நினைவும் வருகிறது
பிள்ளையார் தினத்தன்று .