
எனக்கு
இந்த
கண்பதி
என்றாலே
நினைவுக்குள
பானைச் சில்லு எறியாக
மனதில்
எழக்கூடாத
நினைவலைகளாக
நட்டநடு தெருச்ச்சண்டைகளும்
அடிதடிகளும்.
ரத்தம் சிந்தலும்
சைரன் கூவ
கம்பி ஜன்னல்
நீலநிற பெரிய
வேன் நிரம்பிய
போலீசும்
லத்தி சார்ஜீம்
கண்ணீர் புகைக்
குண்டுகளும்
பியந்து திசைக்கொன்றாய்
சிதறிய காலணிகளும்
தனித்து விடப்பட்ட
அலங்கார வண்டி
அமர்ந்திரந்த
பதினைந்து அடி
பிள்ளையாரும்
எங்குமே
நகர
இயலா
ஒரு மாற்றுத் திறனாளி
இளைஞனும்…
காவல் தத்து
எடுத்து
உத்தமி புதல்வனை
பத்திரமாய்
இடம் சேர்த்த
அந்த நாள்
நினைவுகள்!
…
18/09/2023
மாலை மணி: 04:23

அருமை