இந்திர ஜாலம்/சிவ.தீனநாதன்

பகவானது பரம பக்தரான குர்ரம் சுப்பராமைய்யா 1937 ல் ஸ்ரீ ரமணாச்ரமத்திற்கு வருடத்தில் மும்முறையாவது விஜயம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தார்.

அதன்படி அவ்வருடம் கோடை விடுமுறைக்கு ஸ்ரீ ரமணாச்ரமத்திற்குப் புறப்பட்டார்.

அவர் பகவானது ஹாலில் நுழைந்தவுடன் பகவானும், பகவானது தொண்டர் மாதவ ஸ்வாமியும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். இதன் காரணம் புரியாமல் சுப்ப ராமைய்யா திகைத்து நின்றார்.

அப்போது பகவான். மாதவ ஸ்வாமியிடம் அவருக்கு விஷயத்தை விளக்கிச் சொல்லுமாறு கூறினார்.

அதன்படி மாதவ சுவாமி “பகவான் உங்களுடைய ரமண கீதை மொழிபெயர்ப்பின் விஷய அட்டவணையைத் தயாரித்துக் கொண்டே, “இப் புத்தகத்தின் ஆசிரியரே தற்போது நேரில் வந்து இதைப் பூர்த்தி செய்ய நேரிடலாம், ” என்றார்.

‘பகவான் அட்டவணையின் கடைசி வார்த்தையை எழுதி முடித்த அக்கணமே ‘இந்திராஜாலம்’ போல் நீங்கள் உள்ளே நுழைகிறீர்கள்!’

இதைக்கேட்டு சுப்பராமய்யா தான் இவ்விதம் வர நேர்ந்தது பகவானது பெரும் கருணையினால் தான் என்பதை உணர்ந்து, உவகை எய்தி பகவானைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.