உன்னாலே இந்த வேலையை கூட முடிக்க முடியாதா?/லதா ஸ்ரீனிவாசன்

அப்பாவின் கோபக்குரல்,படுக்கை அறை வரைக் கேட்டது.

தினம்,வீட்டில் இப்படித்தான். அப்பா கிளம்பும் வரை அருண் வெளியில் வரமாட்டான்.

இவன் மேல் ஏதாவது கோபம் என்றாலும்,இவனை ஒன்றும் கூற மாட்டார். அம்மாவுக்கு அதிகமாக
திட்டு விழும். அதனாலேயே..பதுங்கினான். இரவு ஒன்பது மணி வரை நிம்மதி.

அருண்….. எழுந்துட்டயா?காபி கலக்கவா?

ஏம்மா, எப்படி மா இவரோட இருக்க.
நீ இப்படி வாய் மூடியே இருக்கறதுனால தான் அவர் ரொம்ப
எகிறரார்.

அமைதியாக இருந்த அம்மா…

அவர் மனம் முழுக்க நாதான் இருக்கேன்.. என் மேல் இருக்கிற அக்கறையால் தான் அப்பாவுக்கு கோபம் டா.

எனக்கு நீ பிறந்த பிறகு சிக்கல் அதிகமாகி நிறைய கடன் வாங்கி தான் மருத்துவ செலவு லக்ஷத்ல ஆச்சு.

அதை வெளில காண்பிக்காம நேர்மையா தன் வேலையை செய்து நம்ம சந்தோஷத்தை மட்டுமே நினைக்கிறார்.

இன்றைக்கு கோபப்பட்டது கூட நான் சரியா மாத்திரை போடலைங்கறதால தான்.

இந்த கோபம் உள்ளத்ல,போளி இல் இருக்கற இனிப்பான பூரணத்தை காப்பாத்தற மாவு போல டா.

அதை நம்ப கூட புரிஞ்சிக்கலைன்னா..

அருணன் கண்களில் மாரிக் காலத்திற்கே உரித்தான….