விருந்து/மீனாக்ஷி பாலகணேஷ்

நண்பர்கள் நால்வர் விருந்திற்கு வருவதாய்

நாட்காலையில் சொல்லிச் சென்ற மகள்

இதோ குக்கரில் பருப்பு வேகிறது

வெங்காய சாம்பாருக்காக- போதாதென்று

அரைக்கிலோ கூட வாங்கிவரச்சொன்ன உருளைக்கிழங்கு

காரக்கறியாகி கமகமக்கிறது. வெள்ளரிக்காய் தக்காளி போட்ட

பச்சடி தயிருடன் சங்கமமாகத் தயாராக!

பாலைக் குறுக்கிக் காய்ச்சிய பாயசம் தயார்! 

குங்குமப்பூ என் குழந்தைக்காக தாராளமாகவே!

அப்பளம், புளியோதரை, அன்னம் ரெடி.

உட்கார்ந்ததும் சுடச்சுட உப்பிய பூரிகள் 

பொரித்துப் போடவும் மாவுருண்டைகள் தயார்!!

மகள் வந்தாள், தோழிகளுடன்; 

எனக்கவள் ஒரே குழந்தை; இன்னும் நான்கு

குயில்கள் சேர்ந்து வீடெங்கும் இன்னிசை!

குமரிகளின் கும்மாளம், மனம் நிறைந்து

வீடெங்கும் ஆனந்தம் வழிகின்றது.

உணவு நேரம் குயில்களே! வாருங்கள் உணவருந்த!

‘ஆன்ட்டி! உங்களுக்கு சிரமம் தர வேண்டாம் என்று

அப்போதே பீட்ஸா ஆர்டர் செய்துவிட்டு வந்துவிட்டோம்.”

வாசற்கதவைத் தட்டிய ஸ்விக்கி.

சுடச்சுட புளியோதரை, சாம்பார் தயிர் சாதங்களை

பொட்டலம் கட்டி குயில்கள் கண்டு மனம் நோகாமல் இருக்க

டிரைவரிடம் கொடுத்து பக்கத்து ஆதரவற்ற 

முதியோர் இல்லத்திற்கனுப்பியதும் உள்ளத்தில் நிம்மதி!

கண்களில் நீர் ஏன்? கணவர் மார்பில் சாய்ந்து கேவினேன், 

_____________________

4 Comments on “விருந்து/மீனாக்ஷி பாலகணேஷ்”

  1. பளாரென்று அறையும் உண்மை.
    தற்போதைய தலைமுறை பிரச்னைகள் நாம் யாவரும் சந்திப்பதை அழகான வரிகளில் சொல்லிய விதம் அருமை.

  2. அருமையான கவிதை.பெத்த மனம் பித்து எனச் சொல்வது சரிதான். நம் அம்மா அப்பாவிடம் கேட்டாலும் , இதே மாதிரி ஒரு கதை சொல்வார்களோ என்னவோ?. , அந்த பெண்ணிடம் கேட்டால், ” ஏம்மா, நான் சொல்லவேயில்லை, நீ ஏன் இவ்வளவு சமையல் செஞ்ச ? ” என பதில் சொல்வாள் எனக் கூட தோன்றுகிறது.. அந்த முதியார் இல்லத்தின் பெரியவர்கள் வயிறு குளிர, மனம் நெகிழ வாழ்த்தி இருப்பார்கள். அது கொஞ்சம் நிம்மதி இத்தனை வேலை செய்த பிறகு. ( ஆனால் அருமையான மெனு , அந்தப் பெண்ணுக்கு கொடுப்பினை இல்லை.).

Comments are closed.