மூன்று கவிதைகள்/ பேயோன் 

அமைதி, அமைதி

அடையாளக் குழப்பத்தால்
வேறு யாரையோ கொன்றுவிட்டார்கள்
இறந்தவர் தன்னைச் சரியாக அடையாளம்
காட்டிக்கொள்ளாதது யார் குற்றம்?
நீங்கள் கொடி பிடிக்கும் ஆள்தான் சாகவில்லையே
சும்மா தேவையில்லாமல் பதறாதீர்கள்.

கூண்டு

முதலில் அவனைக் கேலி செய்தார்கள்
பின்பு அவனை விமர்சித்தார்கள்
பிறகு அவனைக் குற்றம்சாட்டினார்கள்
பின்னர் அவனைத் திட்டினார்கள்
அப்புறம் கூண்டோடு கைலாசம் போனார்கள்.

வார்ப்பு

பலகோடிப் பாம்புகளுக்குப்
பால் வார்த்த பாவத்தை
ஒரு பூனைக்குப் பால் வைத்துக்
கரைக்கிறாய்.