துரிதக் கவிதைகள்/அழகியசிங்கர்


  1. என்னிடமிருந்து
    என்னிடமிருந்து
    எதைக் கொண்டு
    போகப் போகிறாய்
    ஒன்றுமில்லாததையா?

2.

எல்லா இடத்திலும்
சூனியம் என்றார்கள்
அப்புறம்
ஏன் பார்க்க வேண்டும்

3.
கண்ணை
மூடிக்கொண்டு
படுத்திருந்தேன்
காட்சிகள் மாறுகின்றன

4.
எனக்குத் தெரிந்தது
உங்களுக்குத் தெரிந்தது
எல்லோருக்கும்
தெரிந்ததைத்தான்
பேசிக்கொண்டிருக்கிறோம்

5.
நன்றி
நன்றி
நன்றி
சொல்லிப் பார்த்துக்
கொண்டேன்