இனிக்கும் தமிழ் – 191/டி வி ராதாகிருஷ்ணன்

ஆசாரக் கோவை

அகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், முதலில் புறத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

ஆசாரக் கோவை போன்ற நூல்கள் புறத் தூய்மை பற்றி பேசுகின்றன.

அதிலி ருந்து ஒரு பாடல்

“ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய மாட்டார்கள், பெரியவர்கள்”

பாடல்

உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார்
உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத் தென்றும் அவைபுகா ரென்பதே
முந்தையோர் கண்ட முறை.

பொருள்

உடுத்தலால் = உடை உடுக்காமல்
நீராடார் = குளிக்க மாட்டார்கள்

ஒன்றுடுத் துண்ணார் = ஒரு துணியை உடுத்தி உண்ண மாட்டார்கள்.(இரு
துணையாவது உடுத்துவர்.அதாவது மேலாடை,கீழாடை)

உடுத்தாடை = உடுத்த ஆடையை

நீருட் பிழியார் = நீரில் பிழிய மாட்டார்கள் (முக்கிய நீரில் இருந்து
எடுத்துவிட்டே பிழிவர்)

விழுத்தக்கார் = பெருமை உள்ளவர்கள்

ஒன்றுடுத் தென்றும் = ஒற்றை ஆடையி உடுத்து என்றும்

அவைபுகா ரென்பதே = எந்த அவையிலும் நுழைய மாட்டார்கள் என்பதே

முந்தையோர் கண்ட முறை. = முன்னோர்கள் கண்ட முறை