காயகல்பம்/சிவ.தீனநாதன்

ஒரு சமயம் அடியார்கள் பகவான் முன்னிலையில் காயகல்ப சாஸ்திரம் கூறுவதெல்லாம் உண்மைதானா என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். பகவான் வாய் பேசாது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார்.

காயகல்பத்தைப் பற்றி சித்த புருஷர்கள் நூல்கள் எழுதியுள்ளனர். இந்த நூல்களின்படி காயகல்பம் செய்து வெற்றி பெற்றவர்கள் பல நூறு வருடங்கள் ஜீவிக்கலாம் என்று அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இதைப் பற்றி அடியார் ஒருவர் பகவானே கேட்டார், ‘ பகவானே! காயகல்ப சாஸ்திரம் கூறுவதெல்லாம் உண்மைதானா?’

பகவான் அமைதியாகக் கூறினார், காயகல்ப சாஸ்திரம் எழுதினவா யாரும் இப்போ உயிரோடு இருக்கிறதா தெரியல்ல!’

பகவானது இந்த பதில் மிகவும் கண்ணியமான ஒரு ஹாஸ்யமாகும் இதற்கு விளக்கம் தேவையில்லை.

எவ்வளவு பெரிய சித்து சக்தியானாலும், அது சித்து சக்தி தான். அது பூரணத்துவமாகாது?