மகள்கள் நாள்.. துரிதக் கவிதைகள்/ஹரணி

.

000

மகளாய் வந்தபோது மகிழ்ந்தேன்
தாயாய் நின்றபோது வாழ்ந்தேன்.
000
எல்லாப் படைப்பிலும்
அத்தனை சொல்லும் அவளே.

000

சேயாய் வந்தவள்
தாயாய் நிற்பவள்.

000

அப்பா என்றழைப்பாள்
ஆயிரம் பூக்கள் மணக்கும்.

000

அவளுக்கான வாழ்வில் அவள்
என் வாழ்வில் என்றும் அவளே.

000