டாக்டர் வள்ளுவர்/மருத்துவர் முருகுசுந்தரம்

  1. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப் புடைத்து

ஆமை தன் பாதுகாப்புக்காக தலை மற்றும் நான்கு கால்களை
ஓட்டுக்குள் உள்ளிழுத்துக் கொள்வது போல, மனிதன் தோல், செவி,
நாசி, வாய், கண் ஆகிய ஐம்புலன்களின் வழி தோன்றும்
அளவுக்கதிகமான இச்சைகளை அடக்கி, மனத்தை
ஒருமுகப்படுத்தினால், அதுவே உடல் நலம் காத்து நீண்ட
நெடுங்காலம் நோயின்றி வாழ உதவும்.
ஆமை தேவையில்லாத நேரங்களிலும், இன்னல் வரும்
நேரங்களிலும் தன் தலையையும், நான்கு கால்களையும், தனது
ஓட்டுக்குள் உள்ளிழுத்துக் கொண்டு பாதுகாப்பாக வாழ்கிறது.
தேவைப்படும் போதும், சாதகமான சூழலிலும் தலையையும், நான்கு
கால்களையும் வெளியில் நீட்டிக் கொள்கிறது. இதனால் தான்
உலகில் நீண்டகாலம் வாழும் உயிரினங்களில் ஒன்றாக ஆமை

திகழ்கிறது. அது போல மனிதன் தேவையற்ற நேரங்களிலும் துன்பம்
வரும் போதும், ஆசையைத் தூண்டும் ஐந்து உறுப்புகளான தோல்,
செவி, நாசி, வாய், கண் ஆகியவற்றின் வழி தோன்றும் அளவற்ற
இச்சையை அடக்கி, அதில் வெற்றி காணும் ஆற்றல் பெற்று, தன்
எண்ணங்களை ஒருமுகப்படுத்தி வாழவேண்டும்.
அவ்வாறு ஐம்புலன்களின் அளவற்ற ஆசையைக் கட்டுப்படுத்தி,
ஒழுக்க நெறியில் வாழ்பவர்களை ஒரு நோயும் அண்டாது, என்று
அறிவுறுத்துகிறார் அறிவுத் தந்தை வள்ளுவர். அவர்கள் நல்ல உடல்
நலத்துடன் நீண்டகாலம் வாழலாம் என்ற உறுதிமொழியும்
தருகிறார்.

SENSES CONTROLLED LIKE A TORTOISE…
ENSURES HEALTHY LONG LIFE IN POISE…