அன்புச்செல்வி சுப்புராஜூ மூன்று கவிதைகள்

(வகைமை : அழகியசிங்கரின் என்பா)

வளைந்து நெளிந்து மெல்ல நகருகிறது
இருத்தலை நிலை நிறுத்தும் போராட்டம்
தடம் மறைந்து போகாதிருக்க வேண்டும்
காய்ந்தும் காயாத ஆறு!


கடவுள் சித்தம் எதுவோ என்றே
கால் போன போக்கில் நடந்தான்
கண்களைத் திறந்து பார்த்த பொழுது
தொடங்கிய இடத்தில் நின்றான்


நகரவா, வேண்டாமா தயங்கித் தவித்து
நகர்தலே இறுதி என்று உணர்ந்து
இடம் பெயர்தலில் உணரப் படும்
நிலையற்ற தன்மையே நிலையானது

2 Comments on “அன்புச்செல்வி சுப்புராஜூ மூன்று கவிதைகள்”

  1. மிக மிக நன்று மா..நதியென தமிழ் வார்த்தைகள் பயணிக்கிறது கவிதை எங்கும்…

Comments are closed.