சசிகலா விஸ்வநாதன் கவிதைகள்

1.

கடவுள் சித்தம்

இறப்பிற்கு காத்திருக்கும் முதுமை; ஏமாறும்!

வாழ்விற்கு காத்திருக்கும் இளமை; ஏமாறும்!

காத்திருப்பது, கையில் என்றும் கையகப்படாது‌.

கடவுள் சித்தம் எதுவோ?

2.

நல்லோரை எவ்வாறு
நான் அறிய?

நீ நல்லோன் ஆகு முதலில்;

உன் மாசு நீயே அறுக்க;

புலப்படுவார்; நல்லோர் உனக்கு

3.

நிலையற்ற நிலைதான் நித்தியம் எனின்;

நான் எங்கனம் நாட்களை கடந்து

வருவேன்? எந்த ஆதார மையமும்

இன்றி; என் செய்வேன்?