காந்தியின் கடைசி வம்சம்/மீனாட்சி சுந்தரமூர்த்தி

  1. கதைச் சுருக்கம்’

காந்தி சுப்பிரமணியம் ஒரு காந்தியவாதி. கதராடைதான் அணிவார், காந்தியக் கொள்கைகளில் பற்று வைத்திருப்பவர்.
காந்தி சுடப்பட்டபோது இவருக்கு வயது 12.
இவர் கருத்தரங்கு ஒன்றில் பேசிவிட்டு வீடு திரும்பும்போது ஒரு பிச்சைக்காரச் .சிறுவனை,’இனி நீ பிச்சை எடுக்கக் கூடாது, படிக்கவைக்கிறேன்’ என்று சொல்லி அழைத்துக் கொண்டு வருகிறார்.
அடுத்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்க்கலாமென நினைக்கிறார்.
ஆனால் வீட்டிலிருந்தவர்கள் அவனிடம் குறைந்தபட்ச அன்பு கூட காட்டுவதில்லை,அவர்களுக்கு பிச்சைக்காரனை வீட்டில் வைத்திருப்பது துளியும் பிடிக்கவில்லை. ஆனால் எல்லோரும் ஓய்வின்றி வேலை வாங்கத் தவறவில்லை.இவர் ஒரு நான்குநாள் பயணமாக கல்கத்தா செல்கிறார், அப்போது மருமகள் சிறுவனிடம் கடைவீதி சென்று மீன் வாங்கிவரச் சொல்கிறாள்.அவனும் வாங்கி வந்து சுத்தம் செய்து தருகிறான். இவனுக்குத் தட்டில் உணவு வரும்போது ஒரு மீன்துண்டு கூட இல்லை. இதனால் மனமுடைந்த சிறுவன் சமையலறையில் மீன் வாங்கி மீதம் வைத்திருந்த பணத்தில் 50 ரூபாயை எடுத்துச் செல்கிறான்.மீன் வண்டிக்கரனிடம் தருகிறான் அவன் சாப்பாடு தீர்ந்து போனது என்கிறான். சிறுவன் அவனிடமே பணத்தை வைத்திருக்கச் சொல்லி மறுநாள் வந்து சாப்பாடு வாங்கிக் கொள்வதாகச் சொல்லிச் செல்கிறான்.
வீட்டில் மறுநாள் காலை பிடிபட்டு அடிவாங்கும்போது சுப்பிரமணியம் வருகிறார்.
நடந்தது அனைத்தும் அறிகிறார். மகன்களையும் மருமகளையும் அழைக்கிறார்.கல்கத்தாவில் மீனைச் சைவம் என்கின்றனர்.கடல் வாழை என்று அழைக்கின்றனர்.
‘இந்தியாவுல இருக்கற கல்கத்தாவில் ஒரு நீதி, சென்னையில் ஒரு நீதியா? இனி மருகளே நீ தாராளமாக சமை. ஆனால் நம்மை நம்பி வந்த இந்த பயலுக்கும் கொடுங்க’ என்கிறார். சிறுவனை அழைத்துக் கொண்டு மீன்மார்க்கெட் நோக்கி நடந்தார்., பைக்குள் கை விட்டு பணம் இருப்பதை உறுதி செய்துகொள்கிறார்..

  1. காந்தியவாதி- காந்தியச் சிந்தனைகள் பற்றி காந்தி சுப்பிரமணியம்;

1.மகாத்மாவின் நினைவாக மகன்களுக்கு மூத்தவனுக்கு ரகுபதி என்றும்
இளையவனுக்கு ராஜாராம் என்றும் பெயரிடுகிறார்.
காந்தியின் செயலாளர் மகாதேவ் தேசாயின் நினைவாக தான் அழைத்து வந்த பாலு என்ற பிச்சைக்காரச் சிறுவனின் . பெயரை மகாதேவன் என மாற்றினார்

  1. கருத்தரங்கு ஒன்றில் -காந்தியின் நிகழ்காலத் தேவை பற்றிப் பேசுகிறார்
    .மகாத்மாவை இந்தியர்களுக்காக வைத்துள்ளோமா,
    வெளிநாட்டு அதிபர்களும் தூதுவர்களும் அஞ்சலி செலுத்த அடையாளமாக வைத்துள்ளோமா
  2. சுட்டுக் கொல்லப்படுவதற்கு 28 மணிநேரம் முன்னர் எழுதி வைத்த சாசனத்தை மறந்து விட்டோம்.’ இன்றுள்ள ஸ்தாபனத்தைக் கலைத்துவிட்டு,’ லோக் சேவக் சங்கம் ‘ என்ற ஒன்றை ஏற்படுத்தவேண்டும்.என்பதே அது.
  3. சமூக பொருளாதார- அரசியல்
    கல்வித் தளங்களில் தன்னலமற்ற சேவைதான் பொதுவாழ்வுக்கு வருபவர்களின் குறிக்கோளாக வேண்டும்.என்று சொல்லாமல் சொன்னார்.தொண்டு லட்சியமானால் அது இயக்கம்.பணம்காசு பதவி லட்சியமானால் அது நிறுவனம். சத்தியத்தின் அக்கினிப் பிழம்பாகப் பேசினார் இவர்.இதை மௌனமாக வழிமொழிந்தது மன்றம்.
  4. சொல்வதோடு செய்தும் காட்டுபவர்:
  5. கருத்தரங்கில் பேசிவிட்டு காரில் வீடு திரும்புகையில் பிச்சைக்காரர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது.
    அமைப்பாளர் அவர்கள் நச்சரிப்பு தாளாமல் சில்லறைக்காசுகளை ஆளுக்கொன்றாய் இட்டார், தடுக்கிறார் காந்தி சுப்பிரமணியம் பிச்சைஇடுவது தர்மம் அல்ல தேச விரோதம், பிச்சையை ஒழிப்பதே தேச தருமம்.
    பேச நல்லாருக்கு,எப்படி ஒழிப்பது?
    அரசாங்கம், குடும்பம் , நிறுவனம் மூணும் பிச்சைக்காரர்களைத் தத்து எடுக்கணும்.
    ஓ நீங்கள் எடுங்களேன்.உடனே ஒரு 12 வயது ஒரு பிச்சைக்காரச் சிறுவனைத் தத்தெடுக்கிறார்.
  6. சிறுவனின் மனம், சிக்கல்;,
    அடுத்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்க்கலாம் என்றதால் வீட்டிலிருந்து ஏவிய வேலைகளைச் செய்கிறான்.ஆறே மாதத்தில் வெறுத்துப் போகிறான் இந்தப் புதுவாழ்வை. பிச்சைக்காரனாய் இருந்தபோது அனுபவித்த முக்கியமான இரண்டை இழந்துவிட்டான். ஒன்று சோறு, இன்னொன்று சுதந்திரம்.
    நெடுஞ்சாலைகள்,வீதிகள்,நடைபாதைகள் எனப் பரந்து விரிந்திருந்த அவனது சாம்ராச்சியம் வெறும் முக்கால் கிரவுண்டில் சுருங்கிப்போனது.

காரம் மணம் குணம் நிறைந்த அசைவம் உண்ண அவனது பிச்சையெடுத்த பொருளாதாரம் உதவியது.இங்கு குப்பைத்தொட்டிக்குப் போகவேண்டியதும், மீதமானதும், எச்சில் பட்டதுமே கிடைத்தது. பிச்சை எடுக்கும்போது தவிர மற்ற நேரம் அவன் வீதியில் ராஜா, இங்கு 24 மணிநேர அடிமை. ஒரு எஜமானுக்கு அடிமையாய் இருப்பது எளிது. மூன்று பிசாசுக்களுக்கு வேலைக்காரனாய் இருப்பது சிரமம். என எண்ணுகிறான்.

4.கதை உத்தி;

பின்னோக்கு உத்தியில் கதை சொல்லப்படுகிறது.ஒரு வகையில் ஊஞ்சல்போல கதையின் ஓட்டம் நடக்கிறது எனலாம்.
கதை சிறுவன் வீட்டில் அடிபட்டதிலிருந்து துவங்குகிறது.
பின்னர் பின்னோக்கி நகர்ந்து கதை சொல்லப்படுகிறது.
சிக்கல் தொட்டபின் மீண்டும் முன்னோக்கி நகர்ந்து முடிவடைகிறது.
ஆக ஊஞ்சல் ஒன்று முன்னும் பின்னும் நகர்வது போல் கதை ஓட்டம்.

5.கதையின் நோக்கம்;

காந்தியின் கொள்கைகள் இளையோரிடம் சென்று சேர்ந்தால் நாடு நலம் பெறும் என்பதே,
அந்த வகையில் காந்தியின் சத்தியத்தைச் சிறுவன் மீறவில்லை, ஆனால் சூழலால் திருடனாகிறான்.
பிச்சை இழிவு,திருட்டு பகிர்வு. பிச்சைக்காரன் ஒழிந்தது மகிழ்வு, திருடன் உருவானது வருத்தம் என்கிறார் காந்தி சுப்பிரமணியம்.இதைத் திருத்தப் புதிய இல்லக் கொள்கை வகுக்கிறார் .

  1. தலைப்பு பொருத்தம்;

மகாத்மா காந்தியின் கடைசி வம்சம் என்ற பொருளை வைத்துப் பார்க்க .. அவரது குடும்பத்தில் கடைசி வம்சமெனச் சொல்ல இயலாது. அதே போல் தேசப்பிதா எனக் கொண்டு நோக்க அவரின் கொள்கைகளில் பற்றுடையவர்கள் குறைவாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர புதியவர்களைக் காந்தீயம் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கும்.அது அமரத்துவமானது. அதனால் இந்த வகையில் தலைப்பு பொருந்துவதாகத் தோன்றவில்லை
ஆக இங்கு கதை நாயகன் காந்தி சுப்பிரமணியத்தைப் பின்பற்றுபவர்கள் அவரது மகன்களோ, மருமகளோ எவருமில்லை. இந்த நிலையில் அவர் தத்தெடுத்து வந்த பிச்சைக்காரச் சிறுவனே காந்தியக் கொள்கைக்குச் சான்றாய் நிற்பதனால் அவரின் வம்சம் எனலாம்.

அதிலும் ‘கடைசி ‘ என்றது ஏனெனில் அவன் காந்தீயத்தை முழுமையாக ஏற்றுக் கொள்வானா என்பதும் ஐயமே.
பிச்சை எடுப்பதை விடும் சத்தியத்தை மீறாதவனாய் நின்றதனால் சத்திய சோதனையில் வென்றவனாகிறான் அந்த அளவில் காந்தி சுப்பிரமணியத்தின் கடைசி வம்சம் இவன் எனும் அளவில் தலைப்பு பொருந்துகிறது..

முடிபு;

இயல்பான உவமைகளும், எளிமையான சொல்லாடல்களும் கதைக்கு மெருகூட்டுகின்றன. கனமான கதைக்கருவை இலகுவாகச் சொல்லி வென்றுள்ளார் வைரமுத்து அவர்கள்.