
ஆசிரியர் பக்கம்
25.09.2023 – திங்கட் கிழமை
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: நீங்கள் ஊருக்குப் படிக்க வேண்டுமென்று எடுத்துக்கொண்டு போன புத்தகங்களில் ஒன்றைக் கூடப் படிக்கவில்லையா?
அழகியசிங்கர் : ஒன்றையும் படிக்கவில்லை.
ஜெகன் : ஏன்?
மோகினி : படிக்க வேண்டுமென்று தோன்றவில்லையா?
அழகியசிங்கர் : அப்படி ஒரு மனநிலை படிக்க வேண்டாமென்று தோன்றி விட்டது.
மோகினி : ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் அப்படித் தோன்றியது?
அழகியசிங்கர் : காரணம் தெரியவில்லை. படிக்கும்போதே நான் இப்படித்தான் புத்தகத்தை முடிக்காமலிருந்து விடுவேன்.
ஜெகன் : இந்த முறை யாருக்குச் சாகித்திய அக்காதெமி விருதுக்கு நீங்கள் யார் பெயரை சிபாரிசு செய்வீர்கள்?
அழகியசிங்கர்: தமிழவன் பெயரைத்தான் சிபாரிசு செய்வேன்
ஜெகன் ஏன்?
அழகியசிங்கர் : எல்லாவிதத்திலும் அவர் தகுதியான இலக்கியவாதி. கதைகள் எழுதியிருக்கிறார். நாவல்கள் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் எழுதியிருக்கிறார். புதிய வகை விமர்சனமான அமைப்பியல் வாதத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.
மோகினி : என்னுடைய ஓட்டும் அவருக்குத்தான்.
ஜெகன் : வித்தியாசமான எழுத்தாளர். நானும் கூட அவருக்குத்தான் ஓட்டுப் போடுவேன்.
மோகினி : பரிசுக் கிடைக்கப் போய்ப் பார்க்க வேண்டியவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும்.
அழகியசிங்கர் :அந்த அரசியல்தான் நமக்குக் கடுப்பை ஏற்படுத்தும்.
ஜெகன் : உண்மைதான்.
அழகியசிங்கர் : நான் அந்தப் பரிசைப் பொருட்படுத்தவில்லை.
மோகினி : உங்கள் பணி எழுதிக்கொண்டிருப்பது.
அழகியசிங்கர் : முடிந்தவரை.
மோகினி : இன்றைய இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர். இரவு வணக்கம்.
இரவு : 10.42 மணி
