டாக்டர் வள்ளுவர்/மருத்துவர் முருகுசுந்தரம்

  1. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
    ஆற்றல் தலைப் பட்டவர்க்கு

மனத்தை ஒருமுகப்படுத்தி தவம் செய்து மன வலிமை
பெற்றவர்கள் மரண பயத்தையும் வெல்லும் உடல் நலத்தோடு
நீண்டகாலம் வாழலாம்.

மனத்தை ஒருநிலைப் படுத்தி ஆழ்நிலைத் தியானம் செய்யச் செய்ய
மனவலிமை பெருகுகிறது. உடலுக்கு நேரும் எல்லாத்
துன்பங்களையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் ஆற்றலை மனம்
அடைகிறது. அத்தகைய ஆற்றல் பெற்ற மனம், நோய்களைத்
தவிர்க்கவும், எதிர்த்துப் போராடவும் உடலுக்குத் துணை புரிகிறது.

தியான பலமே நோயற்ற உடலையும், எதையும் தாங்கும்
வலிமையான மனத்தையும் தந்து மரணம் எதிர்கொள்ளும்
அச்சமின்றி நீண்டகாலம் மகிழ்ச்சியாக வாழ உதவுகிறது என்று தவ
வலிமையின் தன்னிகரற்ற ஆற்றலைப் போற்றுகிறார் தவப் புலவர்
திருவள்ளுவர்.

MEDITATION IMPARTS MENTAL STRENGTH…
THAT MITIGATES THE FEAR OF DEATH…