மனதுக்குப் பிடித்த கவிதைகள்-தொகுதி 2 – 163/அழகியசிங்கர்

புன்னகை தயாரிப்பு

ரவி உதயன்

புன்னகை தயாரிப்பது
எளிதாய்ப் படவில்லை எனக்கு

பிறந்த குழந்தையை
என் கைத் தொட்டிலில் இட்டவுடன்
இறுக்கமாயிருந்த
என் முகத்திற்கு
அவசர அவசரமாய்
ஒரு புன்னகையை பொருத்துவதில்
ஈடுபட்டுத் தோற்றேன்.

பெயிரிடப்படாத
அந்தக் குழந்தைக்கு
அழுகையே பாஷையாயிருந்தது.

சூசகமாய்
அழுகை நிறுத்த
நிக்கோட்டின் புற்றாய் வளர்ந்த
உதட்டைக் குவித்து
ஒரு முத்தம் மட்டுமே
வைக்க முடிந்தது என்னால்.

நன்றி : பழகிக் கிடந்த நதி – ரவிஊதயன் – தேடல் பதிப்பகம் – 10 கண்ணகி வீதி, கோட்டை, ஈரோடு 638 001 – மொத்தப் பக்கங்கள் : 62 – விலை : ₹ 30. முதல் பதிப்பு : அக்டோபர் 2002