ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 55/அழகியசிங்கர்

27.09..2023  – புதன் கிழமை

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

மோகினி:  வரும் வாரம் வெள்ளிக்கிழமை, விக்ரமாதித்யன் கவிதைகளை வாசிக்கப் போகிறீர்களா?

அழகியசிங்கர் : ஆமாம்.  அவருடைய பிறந்தநாள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் வந்தது.  கவிதை எழுதுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும் தன் வாழ்நாள் முழுவதும் கவிதைகள் எழுதியவர்.  அதைப் பற்றி சிந்தித்தவர். அவரை மதிக்கிறேன். 

ஜெகன் :  போதையும் கவிதையும்தான் அவர் உலகம்.

மோகினி :  அவருடைய கவிதைப் புத்தகங்களை நீங்கள் வைத்திருக்கிறீர்களா?

அழகியசிங்கர் :  வைத்திருக்கிறேன்.  விருட்சம் பத்திரிகை கவிதைக்கான  பத்திரிகை.  முன்பெல்லாம் தபால் கார்டில் கவிதைகள் எழுதி அனுப்பி விடுவார் விருட்சத்திற்கு.

மோகினி :  தபால் கார்டிலா?

அழகியசிங்கர் :  ஆமாம்.  தொடர்ந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பார்.  எழுதுவதெல்லாவற்றையும் அவர் பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுவார். 

ஜெகன் : உண்மைதான்.

அழகியசிங்கர் : சாகித்திய அக்காதெமி பரிசுக்கு தமிழவன் பெயரைக் குறிப்பிட்டதுபோல் விக்ரமாதித்யன் பெயரையும் குறிப்பிட விரும்புகிறேன். 

மோகினி :   நடக்கிறதுதான் நடக்கும். உங்கள் பரிந்துரையினால் ஒரு பயனும் இல்லை. 

அழகியசிங்கர் : தெரிந்துதான் பெயர்களைக் குறிப்பிடுகிறேன்.

மோகினி :  இன்றைய  இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.

அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.

ஜெகன்: இன்று பேசியது போதும்.

அழகியசிங்கர்.  இரவு வணக்கம்.

(இரவு 10.30 மணிக்கு)