
இந்த இட்லிகளை இரவு முடிவதற்குள்
இவன் சாப்பிட்டு விடலாம்
சாப்பிடாமலும் இருக்கலாம்
தேடிவரும் சிநேகிதனையே
சாப்பிட ச் சொல்லி விடலாம்
சாப்பிடாமல் போனால்
யாருமே வரவில்லை என்றாலோ
காலையில் கழிவிரக்கத்துடன் காகங்களுக்கோ நாய்களுகோ போடலாம் குப்பைத் தொட்டியில் வீசியெறிய நேரலாம் என்ன செய்தாலும் என்ன செய்தாலும். இட்லிகளுக்கு ஒன்றுமில்லை. இட்லிகளைப்பற்றி யோசித்தபடியே எப்படியோ உறங்கிப் போனான் போனவன் சிறுநீர் முட்டை எழுந்த சமயம்
வயிறு பசிக்கிறமாதிரி. இருக்கவே
பொட்டலத்தைப் பிரிக்கையில்
இட்லிகள் சிரிப்பதாகவே பட்டனை ஏனோ.
