
கைப்பிடி இதயம் காட்டும் சாகசம்
எப்படியெலாம் என்றெண்ணிப்பார்த்தேன்
சொற்படி கேட்கும் இதயம் இருந்தால்
சொர்க்கமாகும் வாழ்க்கை முழுதும்
நல்ல ரத்தம் உடலெங்கும் பரப்பி
கெட்டரத்தத்தை நுரையீரலுக்கனுப்பி
ஒவ்வொரு செல்லும் (cell) உயிர் வாழ்ந்திடவே
ஆக்ஸிஜன் (oxygen) வேதிப்பொருட்கள் கொடுத்து
கழிவுப் பொருட்களை உடனே அகற்றி
வெளியேறச் செய்யும் இந்த இதயம்
ஓர் உன்னதமான அதிசயபம்ப் (pump)
ஓய்வேயின்றி உழைக்கும் பம்ப்
அன்பு, பாசம், நட்பு, காதலெனும்
உத்தம குணங்களை உள்ளே இருத்தி
கோபம், வெறுப்பு, பொறாமையெனும்
நீசகுணங்களை நீக்கித்தள்ளி
இதயம் போலேநாமும் வாழ்வோம்
இதுவே வாழச்சிறந்த வழியாம்
இடப்புறம் சாய்ந்த இதயம் இன்று
இருக்கும் நிலையை அளவிட்டுச்சொல்ல
இசிஜி (ECG), எக்கோ (Echo), ட்ரெட் மில் (treadmill) எல்லாம்
செய்து பார்த்து இதயத்தைக் காப்போம்
பரிசோதனைகள் வருடம்ஒருமுறை
செய்து பார்ப்போம், உடல்நலம் காப்போம்
