ஓஷோவின் ஞானக் கதைகள்/ஓஷோ தர்மதீர்த்தா சன்யாஸ்

தமிழாக்கம் : ஓஷோ தர்மதீர்த்தா சன்யாஸ்

புத்தரின் சீடர்களில் ஒருவர் சுபூதி. சுபூதி ஒருநாள் மரத்தின் கீழ் அமர்ந்தார். மௌனமானார். தன்னை மறந்தார்.
சூனியத்தில் மூழ்கி விட்டார். அதனுடன் ஒன்றுபட்டு விட்டார்.

பிறகு திடீரென்று அவரைச் சுற்றிலும். பூக்கள் சொரிய ஆரம்பித்தன. பூக்களான பூக்கள். அவர் பூக்களினாலே மூடப்பட்டு விட்டார்.

அவருக்கு உணர்வு திரும்பியது.

‘இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? இப்பொழுது பூக்களின் பருவம் கூட அல்ல. மேலும் மரங்களிலும் பூக்கள் இல்லை’ என்று சுற்றிலும் பார்த்தார். ஆச்சரியமும் வியப்பும் அடைந்தார்.

அப்போது தேவர்கள் அவரது காதில் கூறினார்.

“தங்களது சூனியத்தின் சொற்பொழிவிற்காக பூக்களைப் பொழிந்து எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

சுபூதி இதனால் மேலும் வியப்படைந்தார். அவர் கூறினார்:

“ஆனால். நான் சூனியத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே!”

தேவர்கள்கலகலவென்று சிரித்தவாறு கூறினார்கள்:

” நிச்சயமாக நீங்கள் சூனியத்தைப் பற்றிப் பேசவில்லை. நாங்களும் சூனியத்தைப் பற்றிக் கேட்கவில்லை. ஆனால் இதுதான் உண்மையான சூனியமாகும்!”

சுபூதியின் மீது மேலும் மலர்கள் மழையைப் போல் சொரிந்து கொண்டிருந்தன.

One Comment on “ஓஷோவின் ஞானக் கதைகள்/ஓஷோ தர்மதீர்த்தா சன்யாஸ்”

Comments are closed.