
பார்த்த இடத்தில்
பணிந்து
ஆசி பெற்றுக் கொண்ட போது
‘வீட்டுக்கு வர மாட்டியா?’
என்று
உரிமைக் கோபத்தில்
கேட்டாயே ருக்கு!
சத்தியம் செய்தோமே, ருக்கு,
அக்டோபரில் வருவோம்
என்று !
பத்து நாட்கள் கூட ஆகவில்லை, செப்டம்பரிலேயே
வர வைத்தாயே ருக்கு…
எழுந்து வந்து பாராமல்
யுகாந்திர
உறக்கத்தில்
இருந்தாயே ருக்கு!
அம்மாவின் தங்கை நீ
அவள் என்னைப் பிரிந்த
இள வயதின் கலக்கத்தில்
அம்மா என்றுன்னைப்
பற்றிக் கொண்ட
பரவசத்தில்
புக்ககம் போக வேண்டிய இன்பத் திருநாளைக் கூட
உன்னவர் புரிதலோடு
ஒத்திப் போட்டு
எனக்காகக்
காத்திருந்த கதை
கண்களை நனைக்க
இப்போதென்ன அவசரம், ருக்கு?

Unable bare the loss of her Mama..her memories will remain with us.. missing her her caring & scolding .. 😩😩😩🙇♂️
தங்களுக்கும்,குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் 🌹🙏
ஆழ்ந்த இரங்கல்கள்…
அம்மா அம்மா
இழப்பின் வலி கவிதையில் தெரிகிறது..
அது அன்பின் வலி.
மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையவில்லை
கண்ணை விட்டு போனாலும் என்னை விட்டு போகவில்லை
எப்போதும் முகத்தில் உற்சாகம்
பேச்சில் தெரியும் கம்பீரம்
வெளியே செல்ல ஆனந்தம்
உறவு நட்புகளை மதிக்கும்
வந்த விருந்தினர்களை உபசரிக்கும்
வந்தேபாரத்தில் கூட வந்தவர்
தனியாக விட்டு போனார்
அதே போல் வேகமாக சென்றார்
ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை
பெருமாள் திருவடி நிழலில் கலந்தார்
எஸ் வீ ராகவன் சென்னை
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.