கவிதை பாராட்டப்பட வேண்டுமானால்/ஔவையார்

அழகியசிங்கர்

(தனிப்பாடல் திரட்டு புத்தகத்திலிருந்து)

(சோழ மன்னன் கம்பரின் பாட்டை வியந்தான்; அப்போது ஔவை பாடியது)

விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்;

விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும் ; – அரையதனில்

பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் ; – அவர் கவிதை

நெஞ்சேனும் வேம்பேனும் நன்று.

அவர் கவிதை நஞ்சனும் வேம்பனும் நன்று.

கருத்து :

பரிசைப் பெற எண்ணும் கவிஞரை தந்திரக்காரர் இரண்டு பேர் புகழ்ந்து பேச வேண்டும் ; விரல்நிறைய மோதிரங்கள் அணிந்திருக்க வேண்டும்; இடுப்பில் நல்ல பஞ்சாடை அல்லது பட்டாடை அணிந்திருக்க வேண்டும்; அப்படியானால் அவருடைய கவிதை நஞ்சைப் போலக் கொடியதாக இருந்தாலும் வேம்புப் போலக் கசப்பானதாக இருந்தாலும் நல்லது என ஏற்றுக்கொள்ளப்படும்.

என் பார்வை :

காலம்காலமாக கவிஞர் ஒருவரையொருவர் பார்த்துப் பொறாமை படுவது இருந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போதோ இன்னும் அதிகமாக இருக்கிறது. கம்பனைப் பார்த்தே ஔவை பொறாமைப் படுகிறாள் என்றால் என்னவென்று சொல்வது? ஆனால் ஔவை கவிதையை சிறப்பாக எழுதி உள்ளார்.