
(அழகியசிங்கரின் என்பா)
1.
இன்று உலக காபி தினம்;
இன்று மட்டும் என்ன என்றுமேதான்!
காபி தினம்; தஞ்சை டிகிரி
காபி கையில் இருக்க.
2.
இன்று உலக காபி தினம்
உன்னதமான ஒரு காபிக்கு பொருத்தம்
பித்தளை டவரா
டம்ளர் காபியே!
மற்றெதெல்லாம் ஒரு காபியா?
3.
இன்று உலக காபி தினம்
கொண்டாடுவோம் நாம்; நாவிற்கினிய காபியை,
நன்றாய் தினம் தினம் சுவைத்து;
நண்பருடன் அன்பாய் பகிர்ந்து.
1-1-2023
