(வகைமை : அழகியசிங்கரின் என்பா)

000
காமராசர் என்றொரு மானுடன் இருந்தான்
காய்ந்த வயிற்றைக் கண்டு கலங்கிச்
சோறு போட்டுக் கற்க வைத்தான்
புகழ் போற்றி நிற்போம்.
கதர்ச் சட்டை கர்ம வீரன்
கனிவுப் பேச்சு காவிய தலைவன்
ஆட்சிக் காலம் அற்புதக் காலம்
புகழ் போற்றி நிற்போம்.
படிக்காத மேதை படிக்கச் சொன்னான்
எல்லாம் எல்லாரும் பெற வேண்டும்
பயனுறு திட்டங்கள் செய்து நின்றான்
புகழ் போற்றி நிற்போம்.
எளிய உடை எளிய உணவு
எளிய வாழ்வு இனிமைப் பேச்சு
கடமையில் கண்டிப்பு ஆட்சியில் நேர்மை
காமராசன் புகழ் போற்று.
காமராசன் செய்த செயல் சிறப்பு
காமராசன் பேச்சு கற்கண்டு சுவை
காமராசன் காலம் பொற் காலமே
புகழ் போற்றி நிற்போம்.
