
காந்தி வந்தார்..
காந்தி வந்தார்..
காந்தி வீதியிலே.!
பிராந்திக் கடைகள்
நிறைந்திருக்கும்
காந்தி வீதியிலே.!
வருந்தி நின்றார்..
வருந்தி நின்றார்..
சிலையின் வடிவிலே!
வாங்கித் தந்த
சுதந்திரத்தால்..
காந்தி வீதியிலே.!
அரையாைடை யைக்
கூட ஒருவன்..
உருவி ஓடுகிறான்!
அடிதடிக்கு இவர்த்தடியை.. எடுத்து ஓடுகிறான்.!
மதுக் குடித்து
சிலையருகே உருண்டு புரள்கிறான்.!
மனம் பதைத்து நின்றிருந்தார்..
காந்தி வீதியிலே.!
கதர் சட்டைப் போட்டு ஒருவன் காரில்
வருகிறான்!
கறுப்புப் பணத்தை
வெளிநாட்டில்..
பதுக்கித் திறிகிறான்!
காந்தி பக்தன் என்று ஒருவன் ஊரை
ஏய்க்கிறான்.!
குல்லாப் போட்டக் குரங்கு நிலையில் காந்தி வீதியிலே.!
அன்னியரின் ஆதிக்கம் விரட்டியக் கிழவன்..
அரையாடை பறிகொடுத்த.. அகிம்சையின் தலைவன்..
பதவி பதவி
பரபரக்கும் போலிகள் நடுவே.. பரிதாப மாக நின்றார் காந்தி வீதியிலே.!
பெங்களூரூ.

Arumai