
ஔவையார்
(தனிப்பாடல் திரட்டு)
சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்;
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்; – நித்தம்
நடையும் நடைப்பழக்கம்; நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.
ஓவியம் எழுதுவது கைப்பழக்கத்தால் சிறப்பை அடையும். சிறந்த தமிழ் தேர்ச்சி நாவின் பழக்கத்தால் உண்டாவதாகும். நல்ல கல்வி தேர்ச்சி மனப் பயிற்சியால் ஏற்படுவதாகும். நாள்தோறும் அதிக தொலைவு நடப்பது நடந்து பழகும் பழக்கத்தால் ஏற்படுவதாகும். நட்பும் இரக்கமும், கொடை குணமும் பிறவி குணங்கள் ஆகும்.
என் கருத்து : ஔவையாரின் இந்த அற்புதமான பாடலை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். எல்லாம் பழக்கத்தால் வருகிறது. டூ வீலர் ரிப்பேர் என்பதால் இன்று நடந்து பூங்காவிற்கு சென்றேன். என்னால் நடக்க முடியவில்லை. ஔவையார் நடையைக் கூட நடந்து நடந்து பழகிக் கொள்ள வேண்டும் என்கிறார். இன்னொன்று சொல்கிறார். கொடைக்குணம். அது இயல்பாக இருக்க வேண்டும். எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டிய கவிதை.

Miga arumaiyana கருத்துக்கள்!