
ஒவ்வொரு எழுத்தாய் கூட்டிக் கூட்டி வாசித்துக் கொண்டி.ருக்கிறாள் அட்சயா பாப்பா
குதித்துக் குதித்து
ஓடுகிறது
கொஞ்சம் எழுத்துகள்
வலிந்து பிடித்து வைக்கிற
எழுத்து வாய் நுழையாது அடம்பிடிக்கிறது..
எனக்கும் அப்படித்தான் இருக்கிறது
காலையிலிருந்து கைக்குச் சிக்காமல்
கவிதை ஒன்றிலிருந்து தப்பி ஓடும் சொற்களை
பிடிப்பது.
என்னவோ சொல்லுங்கள் எப்போதும் எதிலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது வெகு உத்தமம் தான் போலிருக்கிறது
பாருங்கள் இந்த
எழுத்துகள்
எத்தனை உண்மையாய் எத்தனை சுதந்திரமாகத் திரிகிறது என்று..
5.10.2023
