ரேவதி பாலு/கிறுக்கல்கள்

“என்னடா
உன் பசங்க இப்படி செவுத்துல தரையில எல்லாம் கிறுக்கி வச்சிருக்காங்க. மேல் போர்ஷன்ல இருக்குற ஹவுஸ் ஓனர் பார்த்தா கத்த மாட்டாரா.”

ரவி சிரித்தான்.

” நீங்க வேறப்பா. முதல்ல பார்த்ததும் கத்த தான் செஞ்சாரு. அப்புறம் நான் வீடு காலி பண்ணும் போது சுவத்துக்கு ஒயிட் வாஷ் பண்ணி விட்டு விடுகிறேன் என்று சொன்னவுடனே……”

” சொன்னவுடனே….
. என்னடா சஸ்பென்ஸா நிறுத்திட்ட” என்றார் அப்பா.

” என் பசங்களுக்கு ஈடான வயசுல இருக்குற அவரோட பசங்களையும் கூப்பிட்டு இங்கேயே கிறுக்கிக்க சொல்லிட்டு நிம்மதியா போயிட்டாரு”

ரவி விழுந்து விழுந்து சிரிக்க அப்பா விக்கித்து போய் நின்றார்.

One Comment on “ரேவதி பாலு/கிறுக்கல்கள்”

  1. ஆக, கிறுக்கல்களுக்கு எதிர்ப்பே இல்லை!
    வெள்ளை அடிப்பதில் தான்
    போட்டியே!

    அவர்பங்குக்கு ஏதாவது கிறுக்கிட்டுப் போயிருக்கலாம்

Comments are closed.