விஜயலக்ஷ்மி கண்ணன்/வாண்டு ரங்கா

ரமணி தன் மேஜை மீது கிடந்த குறிப்பு புத்தகத்தை பார்த்து திடுகிட்டான்.
நாம் இல்லாத போது யார் இந்த வேலை செய்திருப்பார்கள்?
ஆபீஸ் வேலைகளை நோட் பண்ணி வைக்கிற இடத்தில் இந்த கறுப்பு மை வரைதல்கள் எந்த ஓவியன் தீட்டியது!
ரமணியின் மனைவி நர்ஸ்.
இரவு ஷிஃப்ட் முடிந்து வந்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
“மாமா,”
குரல் கேட்டு திரும்பி பார்த்தான் ரமணி.
பக்கத்து ஃபிளாட் சிறுவன் ரங்கா சிரித்தபடி நின்று கொண்டு இருந்தான்.
“நன்றாக இருக்கா மாமா?
நான் தான் உங்கள் நோட்டில் வரைந்தேன். அப்பா கறுப்பு மை வாங்கி கொடுத்தார்.
காகிதம் தீர்ந்து போய் விட்டது.
எப்படி எழுதுகிறது என்று பார்த்தேன்.
சரி, வரைஞ்சா நல்லா இருக்கும் என்று நினைத்தேன் மாமா, அது தான்.”
என்று குறும்பு சிரிப்பு உதிர்த்தான் சிறுவன்.
ரமணி தலையில் கை வைத்து உட்கார்ந்தான்.

.
.