புஷ்பா விஸ்வநாதன்/பொக்கிஷம்

தமிழக அரசு இவ்வாண்டின் தலைசிறந்த ஓவியராக சங்கரைத் தேர்ந்தெடுத்த செய்தி இன்று காலை பத்திரிகைகளில் வந்திருந்தது.

சற்று நேரதத்தில் ஒரு பிரபலப்பத்திரிகையிலிருந்து அவரைப் பேட்டி காண ஒரு நிருபர் வந்தார். பேட்டி முடியும் தருவாயில் அந்த நிருபர் கேட்டார். ” நீஙகள் மிகவும் விரும்பும், போற்றிப் பாதுகாக்கும் ஓவியம் எது? “

“எனக்கு மிகவும் பிடித்த, நான் பொகக்கிஷமாகக்கருதும் ஓவியம்
ஒன்றுண்டு.” என்று கூறி சங்கர் அவரைத் தன் அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கு சுவற்றில் ஒட்டிவைத்திருந்தது காகிதத்தில் வரைந்த ஒரு ஓவியம்.

” இது என் மகன் ஐந்து வயதில் வரைந்தது. “

” ஐந்து வயதிலா? அருமையாக இருக்கிறதே. புலிக்குப்பிறந்தது பூனையாகுமா? இன்று உங்கள் மகன் எங்”

சட்டெனறு இடைமறித்த சங்கர். “இன்று அவன் நம்மிடையே இல்லை. ரத்தப்புற்றுநோய் அவனை என்னிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்து விட்டது. இறப்பதற்கு சில தினங்கள் முன்பு இதை வரைந்து என்னிடம் கொடுத்து ” என்‌ ஞாபகமா இதை பத்திரமாக வெச்சுக்கோ” என்று சொன்னான்.

பொங்கும் கண்ணீரை அடக்கமுடியாமல் தவித்தார் அந்த நிருபர்.

One Comment on “புஷ்பா விஸ்வநாதன்/பொக்கிஷம்”

  1. அருமை. சில நினைவுகளைக் கொண்ட குப்பை என்று மற்றவர்களால் கருதப்படும் பொருட்கள் யாவும் பொக்கிஷங்களே

Comments are closed.