
பொன் நகை வேண்டாம்
புன்னகை போதும்!
சொன்னவர் பிள்ளை வீட்டார்.
புன்னகை எங்கே, தேடி அலைந்தனர்
பெண் வீட்டார்.
நகைக் கடை முன்னில் விளம்பரம் காட்டியது,
“இங்குப் புன்னகை கிடைக்கும்.”
எழுதி வைத்து இருந்தார்கள் உள்ளே
“பொன் நகை வாங்கினால் எங்கள் பரிசாக புன்னகை இங்கு கிடைக்கும்”.
